சேலம்: வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை ரூ.1473.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதத்தை விட ரூ. 128 குறைந்துள்ளது.ஓட்டல், டீக்கடைகளில் பயன்படுத்தப் படும் 19 கிலோ எடை கொண்டவர்த்தக கேஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குவதில்லை. இதன் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாதம் தோறும் நிர்ணயம் செய்து வருகிறது. வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தது. இதன் உச்சக்கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1890 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மே மாதத்தில் இருந்து விலை குறைய துவங்கியது. மே மாத விலை ரூ. 1748 ஆக இருந்தது. ஜூன் மாதத்தில் ரூ. 1601.50 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டது. அந்த விலையில் இருந்து தற்போது ஜூலை மாதத்திற்கு ரூ.128 குறைந்து ரூ.1473.50 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதத்தில் சிலிண்டர் விலை ரூ.417 குறைந்துள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/2/2025 3:39:05 PM
-Updated 7/2/2025 3:26:05 PM
-Updated 7/2/2025 2:36:45 PM
-Updated 7/2/2025 12:44:01 PM
-Updated 6/26/2012 5:22:51 PM
-Updated 6/26/2012 5:00:44 PM
-Updated 6/26/2012 3:13:14 PM
-Updated 6/26/2012 3:12:36 PM
-Updated 6/26/2012 3:08:53 PM
-Updated 6/26/2012 3:08:38 PM
-Updated 6/26/2012 3:07:21 PM
-Updated 6/26/2012 3:06:31 PM
-Updated 6/26/2012 3:06:12 PM
-Updated 6/26/2012 2:54:23 PM
-Updated 6/26/2012 12:16:16 PM