புழல்: செங்குன்றம் அடுத்த அலமாதி எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (40). செங்குன்றம் பகுதியில் ஒரு நாளிதழில் நிருபராக பணியாற்றி வருகிறார். நேற்றிரவு 10 மணிக்கு, செங்குன்றம் காவல் நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தார் ராமமூர்த்தி. அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 5 பேர், அவரிடம் தகராறு செய்தனர். வாக்குவாதம் முற்றியதும் திடீரென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் ராமமூர்த்தியின் வலது கையில் குத்திவிட்டு தப்பி ஓடினர். இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து ராமமூர்த்தியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து செங்குன்றம் போலீசில் ராமமூர்த்தி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 5/31/2012 6:38:56 PM
-Updated 5/31/2012 6:16:13 PM
-Updated 5/31/2012 6:12:33 PM
-Updated 5/31/2012 5:52:20 PM
-Updated 5/31/2012 3:51:37 PM
-Updated 5/31/2012 3:51:11 PM
-Updated 5/31/2012 3:50:49 PM
-Updated 5/27/2012 2:30:46 PM
-Updated 5/27/2012 2:30:33 PM
-Updated 5/27/2012 1:24:43 PM
-Updated 5/27/2012 12:55:29 PM
-Updated 5/27/2012 12:00:30 PM
-Updated 5/27/2012 12:00:11 PM
-Updated 5/27/2012 11:59:44 AM
-Updated 5/26/2012 4:19:42 PM