2012
25
May
மெரினாவில் இன்று காலை பயங்கரம் இளம்பெண் அடித்து கொலை


சென்னை: மெரினா சர்வீஸ் சாலையில் வசித்து வந்த இளம்பெண் இன்று காலை அடித்து கொலை செய்யப்பட்டார். நகை, பணத்துக்காக இந்த கொலை நடந்ததா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை சாந்தோம் தேவாலயம் பின்புறம் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையையொட்டி பலர் தற்காலிக குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். அமுலு (32) என்பவரும் அங்கு வசித்து வந்தார். இவரது கணவர் வெளியூர் சென்றுள்ளார். ஒரு மகளுக்கு திருமணமாகி கணவருடன் தனியாக வசிக்கிறார். மகன் வெளியே சென்றிருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை வீட்டில் அமுலு, ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள், இதைப் பார்த்து திடுக்கிட்டனர். இதுகுறித்து மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் விரைந்து சென்று அமுலு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அமுலுவை யாரோ அடித்து கொலை செய்தது தெரியவந்தது. நகை, பணத்துக்காக இந்த கொலை நடந்ததா அல்லது முன்விரோதத்தில் நடந்ததா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் சாந்தோம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,