அண்ணா பல்கலை.யில் வாக்கிங் சென்ற வக்கீலிடம் செல்போன், கேமரா அபேஸ்
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாத்தில் வாக்கிங் சென்ற வக்கீலின் செல்போன், கேமரா திருடப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் விஜய், வக்கீல். இவர் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழக வளாக மைதானத்தில் வாக்கிங் செய்வது வழக்கம். நேற்று முன்தினம் வழக்கம் போல் பல்கலைக்கு வந்தவர், காரை பூட்டி சாவியை அருகில் உள்ள மரத்தடியில் வைத்து விட்டு நடை பயிற்சி மேற்கொண்டார். இதை நோட்டம் விட்ட யாரோ, சாவியை எடுத்து காரை திறந்து செல்போன், ஐ போன், கேமரா, ஏடிஎம் கார்டு ஆகியவற்றை திருடியுள்ளனர். பின்னர் இருந்த இடத்திலேயே சாவியை வைத்து விட்டு சென்றுள்ளனர். வாக்கிங் முடித்து திரும்பிய விஜய், பொருட்கள் திருடு போனதை அறிந்து கோட்டூர்புரம் போலீசில் புகார் கொடுத்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 5/27/2012 2:30:46 PM
-Updated 5/27/2012 2:30:33 PM
-Updated 5/27/2012 1:24:43 PM
-Updated 5/27/2012 12:55:29 PM
-Updated 5/27/2012 12:00:30 PM
-Updated 5/27/2012 12:00:11 PM
-Updated 5/27/2012 11:59:44 AM
-Updated 5/26/2012 4:19:42 PM
-Updated 5/26/2012 4:16:36 PM
-Updated 5/26/2012 4:16:19 PM
-Updated 5/26/2012 4:11:04 PM
-Updated 5/25/2012 3:02:18 PM
-Updated 5/25/2012 3:01:57 PM
-Updated 5/25/2012 2:28:36 PM
-Updated 5/25/2012 2:28:18 PM