அணுமின் நிலையத்தில் 20 நாட்களில் மின் உற்பத்தி: மத்திய அமைச்சர் பேட்டி
மீனம்பாக்கம்: மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி நேற்றிரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். நிருபரிடம் அவர் கூறியதாவது: பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி நாடு திரும்ப பிரதமர் உத்தரவிட்டுள்ளார். அவர் பிரதமரை சந்தித்து பேசுகிறார். நிதி அமைச்சர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் ஜெய்ப்பால் ரெட்டி கலந்து கொள்கிறார். அதன்பிறகு, பெட்ரோல் விலை குறைப்பு பற்றி அறிவிப்பு வெளியாகும்.
கூடங்குளம் அணு உலையில் சோதனை ரீதியில் நிரப்பப்பட்டு இருந்த செயற்கை எரிபொருள் அகற்றும் பணி நடக்கிறது. ஒரு வாரத்தில் பணி முடியும். அதன்பின் 20 நாட்களில் மின் உற்பத்தி தொடங்கும். மக்களுக்கு விரோதமாக பால், மின்சாரம் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியவர்தான் ஜெயலலிதா. மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் கட்டணத்தை குறைக்கவில்லை. ஆனால் மத்திய அரசு, மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுகிறது. அதுமட்டுமின்றி, பல வெளிநாட்டு பிரதமர், ஜனாதிபதிகள் இந்தியாவை பாராட்டுகின்றனர். கண்ணை மூடிக்கொண்டு கல்லை வீசுவது போல் மத்திய அரசை குறை கூறி பேசுவது சரியல்ல. இவ்வாறு நாராயணசாமி கூறினார். ஜனாதிபதி தேர்தலில் ஜெயலலிதா முன்மொழிந்துள்ள சங்மாவை காங்கிரஸ் ஆதரிக்குமா என்று நிருபர்கள் கேட்டதற்கு, விடிய, விடிய ராமாயணம் கேட்டுவிட்டு காலையில் சீதைக்கு ராமர் சித்தப்பா என்பதை போல் உள்ளது கேள்வி என்று நாராயணசாமி பதில் அளித்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 5/27/2012 2:30:46 PM
-Updated 5/27/2012 2:30:33 PM
-Updated 5/27/2012 1:24:43 PM
-Updated 5/27/2012 12:55:29 PM
-Updated 5/27/2012 12:00:30 PM
-Updated 5/27/2012 12:00:11 PM
-Updated 5/27/2012 11:59:44 AM
-Updated 5/26/2012 4:19:42 PM
-Updated 5/26/2012 4:16:36 PM
-Updated 5/26/2012 4:16:19 PM
-Updated 5/26/2012 4:11:04 PM
-Updated 5/25/2012 3:02:18 PM
-Updated 5/25/2012 3:01:57 PM
-Updated 5/25/2012 2:28:36 PM
-Updated 5/25/2012 2:28:18 PM