டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி சாவு எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு
ஆலங்குளம்: நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஆலங்குளத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி பலியானாள். இதனால் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர், தென்காசி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தக் காய்ச்சலுக்கு இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுமி பலியானாள். ஆலங்குளம் அருகே மருதமுத்தூர் பாறையடித் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகள் பென்சியாவுக்கு (6) கடந்த 10 நாட்களுக்கு மேலாக காய்ச்சல் இருந்தது. மருதமுத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை எடுத்தனர். இந்நிலையில் நேற்று மாலை பென்சியா பரிதாபமாக இறந்தாள். மருதமுத்தூர் பகுதியை சேர்ந்த மஹிலா, கிருஷ்ணவேணி, ஜெனிசா, மகேஷ், ஆகாஷ், இந்துஜா ஆகிய குழந்தைகள், மாணவி புவனேஸ்வரி ஆகியோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/9/2025 2:55:47 PM
-Updated 7/9/2025 2:37:28 PM
-Updated 7/9/2025 2:36:58 PM
-Updated 7/9/2025 2:36:36 PM
-Updated 7/9/2025 2:29:35 PM
-Updated 7/2/2025 3:39:05 PM
-Updated 7/2/2025 3:26:05 PM
-Updated 7/2/2025 2:41:28 PM
-Updated 7/2/2025 2:36:45 PM
-Updated 7/2/2025 12:44:01 PM
-Updated 6/26/2012 5:22:51 PM
-Updated 6/26/2012 5:00:44 PM
-Updated 6/26/2012 3:13:14 PM
-Updated 6/26/2012 3:12:36 PM
-Updated 6/26/2012 3:08:53 PM