சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆள்பிடித்த ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு அபராதம்
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் வந்து சவாரிக்கு ஆள் பிடித்த ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் 9 பேர் பிடிபட்டனர். அவர்களுக்கு தலா 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் பிரீபெய்டு டாக்சி, ஆட்டோ வசதி உள்ளது. இதற்காக ஆட்டோ, டாக்சி நிறுத்தங்கள் உள்ளன. சென்ட்ரல் வரும் பயணிகள் எங்கு செல்ல வேண்டுமோ அதற்கான கட்டணத்தை அங்கேயே செலுத்தி ரசீது பெற்று ஆட்டோ, டாக்சியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பிரீபெய்டு திட்டத்தில் இல்லாத மற்ற ஸ்டாண்ட் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் ரயில் நிலைய வாசலில் வழியே வரும் பயணிகளை மடக்கி சவாரிக்கு ஆள் பிடிக்கின்றனர். சில நேரங்களில் பிளாட்பாரத்துக்கே வந்து பயணிகளை சவாரிக்கு அழைக்கின்றனர். இதுகுறித்து புகார்கள் அதிகரித்ததால் சென்னை சென்ட்ரல் துணை கோட்ட கண்காணிப்பாளர் பொன்ராம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி இன்ஸ்பெக்டர் சேகர், சப் இன்ஸ்பெக்டர் சசி ஆகியோர் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ரயில் நிலையத்துக்குள் வந்து சவாரிக்கு ஆள் பிடித்து கொண்டிருந்த ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் செழியன், தர்மராஜ், சண்முகம், ஜெயகுமார், சேகர், கம்பீரன், ராமு, ராஜன், குட்டி ஆகிய 9 பேரை பிடித்தனர். அவர்களை ரயில்வே நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு நீதிபதி தலா 300 ரூபாய் அபராதம் விதித்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/9/2025 2:55:47 PM
-Updated 7/9/2025 2:37:28 PM
-Updated 7/9/2025 2:36:58 PM
-Updated 7/9/2025 2:36:36 PM
-Updated 7/9/2025 2:29:35 PM
-Updated 7/2/2025 3:39:05 PM
-Updated 7/2/2025 3:26:05 PM
-Updated 7/2/2025 2:41:28 PM
-Updated 7/2/2025 2:36:45 PM
-Updated 7/2/2025 12:44:01 PM
-Updated 6/26/2012 5:22:51 PM
-Updated 6/26/2012 5:00:44 PM
-Updated 6/26/2012 3:13:14 PM
-Updated 6/26/2012 3:12:36 PM
-Updated 6/26/2012 3:08:53 PM