அடுத்த ஆண்டு சென்னையில் ஆசிய தடகள போட்டி 44 நாடுகள் பங்கேற்பு
சென்னை: சென்னையில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசிய தடகள போட்டி நடக்க உள்ளது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சட்டசபையில், விதி 110ன் கீழ் ஜெயலலிதா, அறிக்கை சமர்ப்பித்து கூறியதாவது: கிராம மக்களிடையே விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்திட ஆண்டுக்கு ரூ.25 கோடியே 5 லட்சம் செலவில் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் கிராம விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். ஆசிய தடகளப் போட்டிகளை இந்தியாவில் நடத்திட ஆசிய தடகள கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்திய தடகள சம்மேளனம், ஆசிய தடகளப் போட்டிகளை 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில், தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்புடன் நடத்திட உள்ளது. இதில் 44 நாடுகளைச் சார்ந்த தடகள விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள்.
இந்தப் போட்டிகளை சிறப்பாக நடத்த சென்னை நேரு விளையாட்டரங்கில் உள்ள செயற்கை இழை தடகள ஓடுபாதை மாற்றியமைக்கப்படும். புதிய பயிற்சி செயற்கை இழை தடகள ஓடுபாதை ஒன்றும் அமைக்கப்படும். தற்போதுள்ள வசதிகள் அனைத்தும் உலக தரத்துக்கு உயர்த்தி, சர்வதேச தரத்திலான உபகரணங்கள் வாங்கப்படும். மேலும் இப்போட்டிகளில் பங்கு பெறும் அனைத்து பன்னாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் உரிய வசதிகள் செய்து தரப்படும். இதற்காக ரூ.40 கோடி செலவிடப்படும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/9/2025 2:55:47 PM
-Updated 7/9/2025 2:37:28 PM
-Updated 7/9/2025 2:36:58 PM
-Updated 7/9/2025 2:36:36 PM
-Updated 7/9/2025 2:29:35 PM
-Updated 7/2/2025 3:39:05 PM
-Updated 7/2/2025 3:26:05 PM
-Updated 7/2/2025 2:41:28 PM
-Updated 7/2/2025 2:36:45 PM
-Updated 7/2/2025 12:44:01 PM
-Updated 6/26/2012 5:22:51 PM
-Updated 6/26/2012 5:00:44 PM
-Updated 6/26/2012 3:13:14 PM
-Updated 6/26/2012 3:12:36 PM
-Updated 6/26/2012 3:08:53 PM