வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடுகளை உள்வாடகைக்கு விட்டால் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது சுரேஷ்குமார், சந்திரகுமார் (தேமுதிக), வெற்றிவேல் (அதிமுக) ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு வீட்டு வசதி துறை அமைச்சர் வைத்தியலிங்கம் அளித்த பதில்: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்ட வீடுகளை வாரியம் சார்பில் பராமரிக்க முடியாது. விற்பனை செய்யப்பட்ட பின்னர், நலச்சங்கங்களை அமைத்து குடியிருப்போர் பராமரித்து கொள்ளலாம். வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் வாடகைக்கு இருப்போர், உள்வாடகைக்கு விட்டுவிட்டு வேறு இடங்களுக்கு சென்றதாக புகார்கள் வந்தால், அவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வாரியத்தால் விற்பனை செய்யப்பட்ட வீடுகளை உரிமையாளர் சீர்செய்து கொள்ளலாம். வாடகைக்கு குடியிருப்போர், அதை மாற்றவோ, சீர்செய்யவோ கூடாது. அப்படி செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பழுதடைந்த குடியிருப்புகளை பழுதுபார்க்க வீட்டு வசதி வாரியம் ரூ.20 கோடியே 96 லட்சம் ஒதுக்கியுள்ளது. இந்த தொகை மூலம் பழுதடைந்த வாரிய குடியிருப்புகள் படிப்படியாக சரி செய்யப்படும். இவ்வாறு வைத்தியலிங்கம் தெரிவித்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/9/2025 2:55:47 PM
-Updated 7/9/2025 2:37:28 PM
-Updated 7/9/2025 2:36:58 PM
-Updated 7/9/2025 2:36:36 PM
-Updated 7/9/2025 2:29:35 PM
-Updated 7/2/2025 3:39:05 PM
-Updated 7/2/2025 3:26:05 PM
-Updated 7/2/2025 2:41:28 PM
-Updated 7/2/2025 2:36:45 PM
-Updated 7/2/2025 12:44:01 PM
-Updated 6/26/2012 5:22:51 PM
-Updated 6/26/2012 5:00:44 PM
-Updated 6/26/2012 3:13:14 PM
-Updated 6/26/2012 3:12:36 PM
-Updated 6/26/2012 3:08:53 PM