வெடிகுண்டு வழக்கில் கைதானவர் கோட்டையில் திடீர் உண்ணாவிரதம்
சென்னை: வெடிகுண்டு வழக்கில் கைதானவர் பாதுகாப்பு கேட்டு கோட்டை முன்பு உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செங்குன்றம் அடுத்த எடப்பாளையம் பகுதியில் வசிப்பவர் கோயில்ராஜ். இவர் நேற்று முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் போலீசாரால் நடந்த கொடுமைகளை தங்கள் பார்வைக்கு கொண்டு வர தலைமை செயலகம் அமைந்துள்ள வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளேன். என்னை குற்றவாளியாக்கிய வெடிகுண்டு பிரிவு போலீசாரிடமே நான் கொடுக்கும் புகார்கள் விசாரணைக்காக வருகிறது. எனவே, உண்மை குற்றவாளியை கைது செய்து என்னை மற்றும் என் குடும்பத்தினரை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. தலைமை செயலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்க போவதாக மனுவில் கூறியிருந்ததால், போலீசார் அவரை உடனே அப்புறப்படுத்தினர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/9/2025 2:55:47 PM
-Updated 7/9/2025 2:37:28 PM
-Updated 7/9/2025 2:36:58 PM
-Updated 7/9/2025 2:36:36 PM
-Updated 7/9/2025 2:29:35 PM
-Updated 7/2/2025 3:39:05 PM
-Updated 7/2/2025 3:26:05 PM
-Updated 7/2/2025 2:41:28 PM
-Updated 7/2/2025 2:36:45 PM
-Updated 7/2/2025 12:44:01 PM
-Updated 6/26/2012 5:22:51 PM
-Updated 6/26/2012 5:00:44 PM
-Updated 6/26/2012 3:13:14 PM
-Updated 6/26/2012 3:12:36 PM
-Updated 6/26/2012 3:08:53 PM