வேளச்சேரி: பள்ளிக்கரணை கிருஷ்ணா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் முத்து (32). டைல்ஸ் பதிக்கும் தொழிலாளி. இவரது மனைவி பத்மா (28). தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். நேற்று முத்து வேலைக்கு போகவில்லை. நண்பர் ரவியுடன் சேர்ந்து பள்ளிக்கரணை ஏரியில் குளித்துள்ளார். அப்போது நீச்சல் அடித்து ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு போகும் போது முத்து தண்ணீரில் மூழ்கியுள்ளார். தகவல் அறிந்ததும் கிண்டி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து ஏரியில் மூழ்கிய முத்துவை தேட ஆரம்பித்தனர். நீண்ட நேரமாக தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை ஏரியில் மிதந்த முத்துவின் சடலத்தை பள்ளிக்கரணை போலீசார் மீட்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/9/2025 2:55:47 PM
-Updated 7/9/2025 2:37:28 PM
-Updated 7/9/2025 2:36:58 PM
-Updated 7/9/2025 2:36:36 PM
-Updated 7/9/2025 2:29:35 PM
-Updated 7/2/2025 3:39:05 PM
-Updated 7/2/2025 3:26:05 PM
-Updated 7/2/2025 2:41:28 PM
-Updated 7/2/2025 2:36:45 PM
-Updated 7/2/2025 12:44:01 PM
-Updated 6/26/2012 5:22:51 PM
-Updated 6/26/2012 5:00:44 PM
-Updated 6/26/2012 3:13:14 PM
-Updated 6/26/2012 3:12:36 PM
-Updated 6/26/2012 3:08:53 PM