அணுமின் நிலையத்தை எதிர்த்து மே 1 முதல் மீண்டும் போராட்டம்
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க, தமிழக அரசு கடந்த மாதம் ஆதரவு அளித்தது. அதன்பின், கூடங்குளத்தில் போலீஸ் படை குவிக்கப்பட்டது. அணுமின் நிலையத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய 200 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மற்றும் புஷ்பராயன் உள்ளிட்ட சிலர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களுடன் கலெக்டர் செல்வராஜ் பேச்சு நடத்திய பின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. மேலும், போராட்ட குழுவுக்கு ஆதரவு தெரிவித்த நக்சல்களுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சதீஷ், முகிலன் தவிர மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் கூடங்குளம் கடலோர கிராமங்களில் நலத்திட்டங்களை அமல்படுத்த தமிழக அரசு ரூ.500 கோடி ஒதுக்கியது. அரசின் இந்த நடவடிக்கையால் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இதையடுத்து மே 1ம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்த போராட்ட குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 5/27/2012 2:30:46 PM
-Updated 5/27/2012 2:30:33 PM
-Updated 5/27/2012 1:24:43 PM
-Updated 5/27/2012 12:55:29 PM
-Updated 5/27/2012 12:00:30 PM
-Updated 5/27/2012 12:00:11 PM
-Updated 5/27/2012 11:59:44 AM
-Updated 5/26/2012 4:19:42 PM
-Updated 5/26/2012 4:16:36 PM
-Updated 5/26/2012 4:16:19 PM
-Updated 5/26/2012 4:11:04 PM
-Updated 5/25/2012 3:02:18 PM
-Updated 5/25/2012 3:01:57 PM
-Updated 5/25/2012 2:28:36 PM
-Updated 5/25/2012 2:28:18 PM