டாஸ்மாக் பார் உதவியாளர்களுக்கு வருகிறது சேல்ஸ்மேன் புரமோஷன்
சேலம்: டாஸ்மாக் பார் உதவியாளர்களுக்கு சேல்ஸ்மேன் பதவி உயர்வு வழங்குவதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை 2003 நவம்பர் முதல் அரசே ஏற்று நடத்தி வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் 6,798 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. 7,785 சூபர்வைசர்கள், 16,286 சேல்ஸ்மேன்கள், 4039 பார் உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்காக சூபர்வைசர்களிடம் ரூ.50 ஆயிரம், சேல்ஸ்மேன்களிடம் ரூ.15 ஆயிரம், பார் உதவியாளர் பணியிடத்துக்கு ரூ.10 ஆயிரமும் காப்புத் தொகையாக பெறப்பட்டுள்ளது. இத்தொகைக்கு அரசு வட்டி வழங்கி வருகிறது. டாஸ்மாக் மது விற்பனையை அரசு ஏற்று நடத்த ஆரம்பித்தபோது பார்களையும் சொந்த பொறுப்பில் நடத்தி வந்தது. வருமானத்தை அதிகரிக்கும் வகையில் பார்களை மட்டும் தனியாருக்கு டெண்டர் விட முடிவு செய்து, தற்போது வரை ஆண்டு குத்தகை அடிப்படையில் டெண்டர் விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், குத்தகை தொகை உயர்வு மற்றும் மது விற்பனை குறைவாக உள்ள கடைகள் அருகே உள்ள பார்கள் ஏலம் போகவில்லை. மாநிலம் முழுவதும் நகராட்சி, கிராம பஞ்சாயத்துகளில் 30 சதவீத டாஸ்மாக் பார்கள் ஏலம் போகவில்லை. இதனால் ஏலம் போகாத பார்களில் உதவியாளராக வேலை செய்து வந்த பணியாளர்கள், கடைகளுக்கு மது விற்பனை பிரிவுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டனர். அவர்களில் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்ற, அனுபவம் வாய்ந்த பார் உதவியாளர்களுக்கு சேல்ஸ்மேன் ஆக பதவி உயர்வு வழங்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதற்கிடையே, மது விற்பனையில் அனுபவம் வாய்ந்த, பார் உதவியாளர்களில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பணியாளர்களுக்கு சேல்ஸ்மேன் ஆக பதவி உயர்வு வழங்க டாஸ்மாக் நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பார் உதவியாளர்களின் பணி அனுபவம் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 5/27/2012 2:30:46 PM
-Updated 5/27/2012 2:30:33 PM
-Updated 5/27/2012 1:24:43 PM
-Updated 5/27/2012 12:55:29 PM
-Updated 5/27/2012 12:00:30 PM
-Updated 5/27/2012 12:00:11 PM
-Updated 5/27/2012 11:59:44 AM
-Updated 5/26/2012 4:19:42 PM
-Updated 5/26/2012 4:16:36 PM
-Updated 5/26/2012 4:16:19 PM
-Updated 5/26/2012 4:11:04 PM
-Updated 5/25/2012 3:02:18 PM
-Updated 5/25/2012 3:01:57 PM
-Updated 5/25/2012 2:28:36 PM
-Updated 5/25/2012 2:28:18 PM