தாசில்தார் ஆபீஸ்களில் அடிப்படை வசதிகள் : அமைச்சர் தகவல்
சென்னை: தாசில்தார் அலுவலகங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, நெய்வேலி சிவசுப்பிரமணியன் (அதிமுக), ஆரணி பாபு முருகவேல் (தேமுதிக) ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில்: பண்ருட்டி நகர தாசில்தார் அலுவலக வளாகத்தில் கருவூலம், பொதுப்பணித்துறை, ஊட்டச்சத்து துறை போன்ற வட்டார அலுவலகங்கள் கட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எல்லா தாசில்தார் அலுவலகத்திலும் கழிப்பறை, ஓய்வறை, குடிநீர், மாற்றுத் திறனாளிகளுக்கு சாய்தள மேடை போன்ற அடிப்படை வசதிகளும் செய்துதர உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 4/27/2012 4:32:59 PM
-Updated 4/27/2012 3:49:13 PM
-Updated 4/27/2012 3:48:41 PM
-Updated 4/27/2012 3:48:23 PM
-Updated 4/27/2012 3:47:58 PM
-Updated 4/27/2012 3:47:38 PM
-Updated 4/27/2012 3:32:33 PM
-Updated 4/27/2012 3:32:09 PM
-Updated 4/27/2012 3:31:20 PM
-Updated 4/27/2012 3:31:02 PM
-Updated 4/27/2012 3:30:03 PM
-Updated 4/27/2012 3:27:35 PM
-Updated 4/26/2012 4:48:39 PM
-Updated 4/26/2012 3:41:15 PM
-Updated 4/26/2012 3:17:32 PM