மின்சார ரயிலில் தகராறு வாலிபருக்கு டியூப் லைட் குத்து போதை ஆசாமி வெறிச்செயல்
ஆவடி: திருவொற்றியூர் ஈசானி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (21). பிராட்வேயில் உள்ள கண்ணாடி கடையில் வேலை பார்த்து வருகிறார். ஆர்டரின் பேரில் ஆவடியில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு கண்ணாடிகளை எடுத்துக் கொண்டு இன்று காலை மின்சார ரயிலில் புறப்பட்டார். 11.30 மணியளவில் அண்ணனூர் ஸ்டேஷனில் ரயில் நின்றது. பயணிகள் இறங்கிக் கொண்டிருந்தனர். போதையில் ஒரு ஆசாமி ஏறினார்.சிறிது தூரம் சென்றதும், சதீஷிடம் அந்த ஆசாமி தகராறில் ஈடுபட்டார். திடீரென அந்த ஆசாமி, ரயிலில் இருந்த டியூப் லைட்டை கழற்றி உடைத்து சதீஷை குத்தினார். ஆவடி ஸ்டேஷன் வந்ததும் அந்த ஆசாமி இறங்கி தப்பி ஓடிவிட்டார். சக பயணிகள், ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆவடி ரயில்வே போலீசார் வந்து படுகாயம் அடைந்த சதீஷை சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்கு பதிந்து, போதை வாலிபரை தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 4/27/2012 4:32:59 PM
-Updated 4/27/2012 3:49:13 PM
-Updated 4/27/2012 3:48:41 PM
-Updated 4/27/2012 3:48:23 PM
-Updated 4/27/2012 3:47:58 PM
-Updated 4/27/2012 3:47:38 PM
-Updated 4/27/2012 3:32:33 PM
-Updated 4/27/2012 3:32:09 PM
-Updated 4/27/2012 3:31:20 PM
-Updated 4/27/2012 3:31:02 PM
-Updated 4/27/2012 3:30:03 PM
-Updated 4/27/2012 3:27:35 PM
-Updated 4/26/2012 4:57:44 PM
-Updated 4/26/2012 3:41:15 PM
-Updated 4/26/2012 3:17:32 PM