தாளம் போட்டதை டிரைவர் கண்டித்ததால் பஸ் மீது மாணவர்கள் சரமாரி கல்வீச்சு
சென்னை: தாளம் போட்டு கலாட்டா செய்ததை டிரைவர் கண்டித்ததால், பஸ் மீது சரமாரியாக கல்வீசி கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவேற்காட்டில் இருந்து மின்ட் செல்லும் மாநகர பஸ் (தடம் எண் 59) நேற்று மதியம் கோயம்பேடு வந்தது. அப்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 20 பேர் ஏறினர். அவர்கள் பஸ்சில் தாளம் போட்டு பாட்டு பாடி ஆட்டம் போட்டுள்ளனர். இதை டிரைவர் திவாகரன் கண்டித்தார்.
பச்சையப்பன் கல்லூரி எதிரில் வந்ததும் மாணவர்கள் கீழே இறங்கி, பின்பக்க கண்ணாடி மீது சரமாரியாக கற்களை வீசினர். இதனால் பயணிகள் அலறி அடித்து பஸ்சில் இருந்து வெளியே குதித்தனர். பின்னர் டிரைவர் திவாகரன் பஸ்சை டிபி சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு ஓட்டிச் சென்று புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கல் வீசிய மாணவர்களை தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 4/27/2012 4:32:59 PM
-Updated 4/27/2012 3:49:13 PM
-Updated 4/27/2012 3:48:41 PM
-Updated 4/27/2012 3:48:23 PM
-Updated 4/27/2012 3:47:58 PM
-Updated 4/27/2012 3:47:38 PM
-Updated 4/27/2012 3:32:33 PM
-Updated 4/27/2012 3:32:09 PM
-Updated 4/27/2012 3:31:20 PM
-Updated 4/27/2012 3:31:02 PM
-Updated 4/27/2012 3:30:03 PM
-Updated 4/27/2012 3:27:35 PM
-Updated 4/26/2012 4:57:44 PM
-Updated 4/26/2012 4:48:39 PM
-Updated 4/26/2012 3:41:15 PM