அட்சய திருதியைக்கு நகை வாங்க சென்றபோது துணிகரம் : தி.நகரில் பெண்ணிடம் ரூ.5.50 லட்சம் அபேஸ்
சென்னை : அட்சய திருதியைக்கு நகை வாங்க தி.நகர் சென்ற பெண்ணிடம் கைப்பையில் இருந்த ரூ.5.50 லட்சம் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடுகின்றனர். வியாசர்பாடி கக்கன்ஜி காலனி ராணியம்மையார் தெருவை சேர்ந்தவர் மாலகொண்டையா. ஓய்வு பெற்ற மில் ஊழியர். இவரது மனைவி ஒபுலம்மா (60). அட்சய திருதியையொட்டி நேற்று, ஒபுலம்மா தனது 3 மகள்களுடன் நகை வாங்குவதற்காக புரசைவாக்கத்தில் 29பி பஸ்சில் ஏறி தி.நகர் சென்று இறங்கினார். அவர் கைப்பையில் ரூ.5.50 லட்சம் பணம் வைத்திருந்தார். ரங்கநாதன் தெரு சந்திப்பில் கூட்டம் அதிகம் இருந்தது.
அப்போது மர்ம நபர் ஒபுலம்மா கைப்பையை பிளேடால் கிழித்து, அதில் இருந்த பணத்தை எடுத்து விட்டார். இது தெரியாமல் உஸ்மான் ரோட்டில் உள்ள ஒரு நகைக் கடை வாசலில் வைத்து பணம் இருக்கிறதா? என்று ஒபுலம்மா பார்த்தார். பணத்தை காணவில்லை. கைப்பை கிழிந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி ஒபுலம்மா மாம்பலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் இந்த திருட்டு சம்பவம் பதிவாகி இருக்கிறதா என்று போலீசார் பார்க்கின்றனர். இதனால் தி.நகரில் கொள்ளை பீதி ஏற்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 5/1/2025 1:32:22 PM
-Updated 5/1/2025 1:30:07 PM
-Updated 5/1/2025 1:22:32 PM
-Updated 5/1/2025 1:08:04 PM
-Updated 4/29/2012 3:09:53 PM
-Updated 4/29/2012 12:58:43 PM
-Updated 4/28/2012 3:29:09 PM
-Updated 4/28/2012 3:21:41 PM
-Updated 4/28/2012 3:18:43 PM
-Updated 4/28/2012 3:16:13 PM
-Updated 4/28/2012 3:15:18 PM
-Updated 4/28/2012 3:00:41 PM
-Updated 4/28/2012 1:06:58 PM
-Updated 4/28/2012 1:05:41 PM
-Updated 4/28/2012 1:05:24 PM