ஆவடி: சென்னை பெரம்பூர் தீட்டி தோட்டம் 6வது தெருவை சேர்ந்தவர் லோகிததாஸ் (27). டெய்லர். இவரது மனைவி இலக்கியா (21). இவர்களுக்கு 9 மாத ஆண் குழந்தை உள்ளது. நேற்று மதியம் நண்பர்களுடன் சூரப்பட்டு பகுதியில் புழல் ஏரிக்கு வந்தார். நண்பர்களுடன் குளித்தார். ஆழமான பகுதியில் சிக்கி லோகிததாஸ் மூச்சு திணறி போராடினார். நண்பர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அம்பத்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஏரிக்கு வந்தனர். படகுகளில் சென்று லோகிதாஸை தேடினர். இரவு ஆனதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இன்று காலை தீயணைப்பு வீரர்கள் சென்று, லோகிதாஸ் உடலை மீட்டனர். சடலத்தை கைப்பற்றிய போலீ சார், பிரேத பரிசோதனைக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 4/29/2012 12:58:43 PM
-Updated 4/28/2012 3:29:09 PM
-Updated 4/28/2012 3:21:41 PM
-Updated 4/28/2012 3:18:43 PM
-Updated 4/28/2012 3:16:13 PM
-Updated 4/28/2012 3:15:18 PM
-Updated 4/28/2012 3:00:41 PM
-Updated 4/28/2012 1:06:58 PM
-Updated 4/28/2012 1:05:41 PM
-Updated 4/28/2012 1:05:24 PM
-Updated 4/27/2012 4:32:59 PM
-Updated 4/27/2012 3:49:13 PM
-Updated 4/27/2012 3:48:41 PM
-Updated 4/27/2012 3:48:23 PM
-Updated 4/27/2012 3:47:58 PM