திருத்தணி, -பைக் மீது கார் மோதியதில் பெண் இறந்தார். அவரது கணவரும் மகனும் படுகாயம் அடைந்தனர். விபத்துக்கு காரணமான கார் டிரை வரை போலீசார் கைது செய்தனர்.திருத்தணி அருகே திருவாலங்காடு வீராபுரம் கிராமத்தை சேர்ந்த தம்பதி மகேந்திரன் (35), சுமதி (29). இவர்களது மகன் தமிழரசன். அங்கு செங்கல் சூளையில் வேலை செய்துவிட்டு நேற்று மாலை பைக்கில் வீட்டுக்கு வந்தனர். அப்போது எதிர்புறத்தில் வேகமாக வந்த கார், பைக் மீது மோதியது. அந்த இடத்திலேயே சுமதி பரிதாபமாக இறந்தார். மகேந்திரன், தமிழரசன் படுகாயம் அடைந்தனர். இருவரும் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். புகாரின்பேரில் திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய் தனர். சென்னை ஜவகர் நகரை சேர்ந்த கார் டிரைவர் சங்கர் கணேஷ் கைது செய்யப்பட்டார். அவரை திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 4/29/2012 12:58:43 PM
-Updated 4/28/2012 3:29:09 PM
-Updated 4/28/2012 3:21:41 PM
-Updated 4/28/2012 3:18:43 PM
-Updated 4/28/2012 3:16:13 PM
-Updated 4/28/2012 3:15:18 PM
-Updated 4/28/2012 3:00:41 PM
-Updated 4/28/2012 1:06:58 PM
-Updated 4/28/2012 1:05:41 PM
-Updated 4/28/2012 1:05:24 PM
-Updated 4/27/2012 4:32:59 PM
-Updated 4/27/2012 3:49:13 PM
-Updated 4/27/2012 3:48:41 PM
-Updated 4/27/2012 3:48:23 PM
-Updated 4/27/2012 3:47:58 PM