தற்கொலை செய்த தம்பதி சடலம் மகன் சமாதி அருகே அடக்கம் : மகளுக்கு தீவிர சிகிச்சை
பொள்ளாச்சி : பாம்பு கடித்து மகன் இறந்த துக்கம் தாளாமல் அப்பா, அம்மா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது சடலம் மகன் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த குரும்பபாளையத்தில் பண்ணை வீட்டை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(42). விவசாயி. இவர் மனைவி சவுந்தரவள்ளி(37), இவரது மகன் அஜய்(16), மகள் திவ்யா(13). இதில் மகன் அஜய் 6 மாதத்திற்கு முன்பு பாம்பு கடித்து இறந்தார். அஜய்யின் இறப்பை தாங்கி கொள்ள முடியாமல் அப்பா, அம்மா, தங்கை தவித்தனர்.நேற்று முன்தினம் இரவு 3 பேரும் கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம் குடித்தனர். இதில் அப்பா, அம்மா இறந்தனர். தங்கை திவ்யாவுக்கு பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்பா, அம்மா சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் கடிதத்தில் எழுதியிருந்தபடி அவர்களது சடலம், மகன் அஜய் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 4/14/2012 12:53:34 PM
-Updated 4/14/2012 12:50:17 PM
-Updated 4/14/2012 12:49:38 PM
-Updated 4/14/2012 12:49:10 PM
-Updated 4/14/2012 12:48:46 PM
-Updated 4/14/2012 12:48:26 PM
-Updated 4/14/2012 12:47:26 PM
-Updated 4/14/2012 12:38:07 PM
-Updated 4/14/2012 12:36:13 PM
-Updated 4/13/2012 4:55:30 PM
-Updated 4/13/2012 3:57:03 PM
-Updated 4/13/2012 3:56:31 PM
-Updated 4/13/2012 3:29:50 PM
-Updated 4/13/2012 2:42:39 PM
-Updated 4/13/2012 2:42:11 PM