2012
10
Apr
பெண்ணை கேலி செய்த விவகாரம் : கோஷ்டி மோதலில் 5 பேர் காயம்


திருவள்ளூர்: கடம்பத்தூரை அடுத்த பிஞ்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவார் பத்மநாபன். இவரது மனைவி தீபா (23). அதே கிராமத்தை சேர்ந்தவர் ஹானஸ்ட் (24). நேற்று முன்தினம் தீபா வெளியே போகும் போது ஹானஸ்ட் அவரை கேலி செய்துள்ளார். வீட்டிற்கு சென்றதும் தீபா கணவரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பத்மநாபன், உறவினர்கள் சிலருடன் சென்று ஹானஸ்ட்டை கண்டித்துள்ளார். அப்போது பத்மநாபன், ஹானஸ்ட் கோஷ்டியினருக்கு இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் தீபா, திரிபுராந்தகம், சத்தியராஜ், ஏழுமலை, சுரேஷ் ஆகியோர் காயம் அடைந்தனர். இது குறித்து தீபா கடம்பத்தூர் போலீசில் திரிபுராந்தகம், சித்தார்தன், ஹானஸ்ட், சத்தியராஜ், சுரேஷ், சுமன் ஆகிய 6 பேர் மீது புகார் கொடுத்தார். திரிபுராந்தகம் புகாரின் பேரில் ஆனந்தன், ரவி, சவுரி, பத்மநாபன், வெண்ணிலா, விஜி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் ஹானஸ்ட், பத்மநாபன், விஜி ஆகியோரை கைது செய்து விசாரிக்கிறார்கள்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,