எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் அனிமேஷன் பாடப்பிரிவு அமைச்சர் தகவல்
சென்னை : இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி கல்லூரியில் நடந்தது. மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்களை வழங்கி செய்தி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசும்போது, எம்ஜிஆர் அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கு படப்பிடிப்பின் போது ஒலிகளை துல்லியமாக பதிவு செய்ய ரூ.5 லட்சம் செலவில் ஒலிப்பதிவு கருவி மற்றும் அனைத்துப் பிரிவு தலைவர்களுக்கும் லேப்டாப் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இக்கல்லூரியில் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக உலக தரத்தில் அதி நவீன அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் என்ற புதிய பாடத்திட்டத்தை தொடங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றார். சென்னை மேயர் சைதை துரைசாமி, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் சங்கர், இணை இயக்குனர் புகழேந்தி, எம்எல்ஏ அசோக், கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/8/2025 2:37:38 PM
-Updated 6/8/2025 2:37:24 PM
-Updated 6/8/2025 1:00:58 PM
-Updated 6/7/2025 4:34:43 PM
-Updated 6/7/2025 4:28:26 PM
-Updated 6/6/2025 3:33:10 PM
-Updated 6/6/2025 3:08:28 PM
-Updated 6/6/2025 3:08:00 PM
-Updated 6/6/2025 3:07:12 PM
-Updated 6/6/2025 3:06:45 PM
-Updated 6/6/2025 3:05:54 PM
-Updated 6/6/2025 3:05:24 PM
-Updated 6/6/2025 3:04:58 PM
-Updated 6/6/2025 3:04:26 PM
-Updated 6/6/2025 3:03:05 PM