தி.மலை: திருவண்ணாமலை அருகே சுடுகஞ்சி கொட்டியதில் இரண்டரை வயது குழந்தை உடல்வெந்து பரிதாபமாக இறந்தது. திருவண்ணாமலை அடுத்த ஐயம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெபவேல் (25). இவரது மனைவி விஜயகுமாரி (23). இவர்களுக்கு இரண்டரை வயதில் அனுசி என்ற பெண் குழந்தை, 8 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை. கடந்த 23ம் தேதி குழந்தை அனுசியுடன் விஜயகுமாரி இருந்தார். அப்போது கைக்குழந்தை அழுததால் அனுசியை தரையில் இறக்கிவிட்டு சென்றார். அங்கு சாதம் வடித்த சுடுகஞ்சி பாத்திரத்தை அனுசி தட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் சுடுகஞ்சி கொட்டியதில் குழந்தையின் உடல் முழுவதும் வெந்தது. அலறித்துடித்த அனுசியை உடனடியாக சென்னை கேஎம்சி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அனுசி நேற்று பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தி.மலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/28/2012 6:17:36 PM
-Updated 3/28/2012 5:46:03 PM
-Updated 3/28/2012 2:58:23 PM
-Updated 3/28/2012 1:02:54 PM
-Updated 3/27/2012 6:08:57 PM
-Updated 3/27/2012 6:08:06 PM
-Updated 3/27/2012 4:30:11 PM
-Updated 3/27/2012 3:46:16 PM
-Updated 3/27/2012 3:33:59 PM
-Updated 3/27/2012 3:32:52 PM
-Updated 3/27/2012 3:32:43 PM
-Updated 3/25/2012 5:38:34 PM
-Updated 3/25/2012 5:38:14 PM
-Updated 3/24/2012 4:30:58 PM
-Updated 3/24/2012 4:29:52 PM