வேலூர்: ரேஷன் கடைகளில் துவரம், பருப்பு உளுத்தம் பருப்பு வினியோகத்தை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏப்ரல் மாதம் முதல் பருப்பு வகைகள் கிடைக்காது. தமிழகத்தில் கடந்த ஆட்சியின்போது நியாய விலைக் கடைகள் மூலம் உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, ஆட்டா, மளிகை பொருட்கள், பாமாயில் உள்ளிட்டவை குறைந்த விலையில் வழங்கும் சிறப்பு பொது வினியோகத் திட்டத்தினை அரசு அறிவித்தது. பருப்பு வகைகள் கிலோ ரூ.30க்கும், பாமாயில் லிட்டர் ரூ.25க்கும், மளிகை பொருட்கள் ரூ.25க்கும் விற்கப்பட்டன. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெற்றனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு, மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவற்றை மானிய விலையில் வழங்கும் திட்டத்தை 112012 முதல் 3132012 வரை 3 மாதங்களுக்கு நீட்டிக்கலாம் எனவும், சமையல் எண்ணெய் வழங்குவதை 112012 முதல் 3092012 வரை நீட்டிக்கலாம் என உத்தரவிடப்பட்டது. தற்போது தமிழகத்தில் உள்ள சிவில் சப்ளைஸ் குடோன்களில் பருப்பு வகைகள் இருப்பு இல்லை. கொள்முதல் செய்வதை அரசு நிறுத்திவிட்டது. அதனால் வருகிற 31ம் தேதியுடன் உளுந்து, துவரம் பருப்பு, ஆட்டா, மளிகை பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படுகிறது. இதுதொடர்பாக வேலூர் மாவட்ட வினியோக அலுவலர் ஒருவர் கூறுகையில், ÔÔதுவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு குடோன்களில் இருப்பு இல்லை. அரசு ஒதுக்கீடு செய்தால்தான் வழங்கப்படும். மளிகை பொருட்கள், ஆட்டா இருப்பு உள்ளது. அவை வினியோகிக்கப்படும்ÕÕ என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/28/2012 6:17:36 PM
-Updated 3/28/2012 5:46:03 PM
-Updated 3/28/2012 2:58:23 PM
-Updated 3/28/2012 1:02:54 PM
-Updated 3/27/2012 6:09:14 PM
-Updated 3/27/2012 6:08:06 PM
-Updated 3/27/2012 4:30:11 PM
-Updated 3/27/2012 3:46:16 PM
-Updated 3/27/2012 3:33:59 PM
-Updated 3/27/2012 3:32:52 PM
-Updated 3/27/2012 3:32:43 PM
-Updated 3/25/2012 5:38:34 PM
-Updated 3/25/2012 5:38:14 PM
-Updated 3/24/2012 4:30:58 PM
-Updated 3/24/2012 4:29:52 PM