திருப்போரூர் : திருப்போரூர் அருகே சிறுதாவூரில் முதல்வர் ஜெயலலிதா பங்களா உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக முதல்வர் தங்கியிருந்து கோட்டைக்கு சென்று வந்தார். முதல்வரின் பாதுகாப்பு பணிக்காக வடக்கு மண்டல ஐஜி சைலேந்திரபாபு, கேளம்பாக்கம் வந்த¤ருந்தார். அப்போது, போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேளம்பாக்கம் போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து இப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, திருப்போரூரில் இருந்து கோவளம் நோக்கி செல்லும் வாகனங்கள், கேளம்பாக்கம்- கோவளம் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப முடியாது. நேராக, வண்டலூர் சாலை சந்திப்பு வரை சென்று, அங்கிருந்து கோவளம் செல்ல வேண்டும். சென்னையில் இருந்து கேளம்பாக்கம் வரும் வாகனங்கள், கேளம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்து ,வலது புறம் திரும்பி சென்னைக்கு சென்றன. தற்போது வலது புறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கேளம்பாக்கம் பஸ் நிலையம் மற்றும் கோவளத்தில இருந்து வரும் வண்டிகள் அனைத்தும் இடதுபுறம் திரும்பி, கேளம்பாக்கம் பெட்ரோல் பங்க் வரை சென்று யூ டேன் போட்டு, சென்னையை நோக்கி செல்ல வேண்டும். கேளம்பாக்கம் பிரதான சாலையில் 6 இடங்களில் யூ டர்ன் எடுத்து வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய போக்குவரத்தை ஐஜி சைலேந்திரபாபு நேற்றிரவு ஆய்வு செய்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/14/2012 4:50:16 PM
-Updated 3/14/2012 4:47:39 PM
-Updated 3/14/2012 3:16:05 PM
-Updated 3/14/2012 2:35:00 PM
-Updated 3/14/2012 2:34:51 PM
-Updated 3/14/2012 2:29:52 PM
-Updated 3/14/2012 2:20:44 PM
-Updated 3/14/2012 2:20:26 PM
-Updated 3/14/2012 2:20:10 PM
-Updated 3/14/2012 2:19:59 PM
-Updated 3/14/2012 2:19:49 PM
-Updated 3/14/2012 2:16:40 PM
-Updated 3/13/2012 3:45:32 PM
-Updated 3/13/2012 3:02:31 PM
-Updated 3/13/2012 2:52:56 PM