வருமான சான்றிதழ் தர விஏஓ மறுப்பு : ஆர்.கே.பேட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் புகார்
பள்ளிப்பட்டு : ஆர்.கே.பேட்டை ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் ஆர்.இளங்கோவன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சி.கே.ஜெயவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியது: மாணிக்கம் (திமுக): பழுதடைந்துள்ள தியாகாபுரம்-ஆவலகுண்டாபுரம் சாலையை சீரமைக்க வேண்டும். பாலு (பாமக): அம்மையார்குப்பம்-காண்டாபுரம் சாலை பழுதடைந்துள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பாபு (அதிமுக): திருமண உதவி தொகை பெற குடும்ப தலைவரின் ஆண்டு வருமானம் ரூ.24,000 க்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எங்கள் பகுதி கிராம நிர்வாக அதிகாரி, வருமான சான்றிதழ் தர மறுக்கிறார். இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணிக்கம் (அதிமுக): பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்டும் பணிக்கு ஒன்றிய அலுவலகத்தில் சிமென்ட் மூட்டை கேட்டால், ‘ஸ்டாக் இல்லைÕ என கூறுகின்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர்: சிமென்ட் மூட்டைகள் வர காலதாமதம் ஏற்படுகிறது. இதனால்தான் உங்களுக்கு வழங்க முடியவில்லை. தலைவர் இளங்கோவன்: உறுப்பினர்கள் தெரிவித்து புகார்கள் பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/14/2012 4:50:16 PM
-Updated 3/14/2012 4:47:39 PM
-Updated 3/14/2012 3:16:05 PM
-Updated 3/14/2012 2:35:00 PM
-Updated 3/14/2012 2:34:51 PM
-Updated 3/14/2012 2:29:52 PM
-Updated 3/14/2012 2:20:44 PM
-Updated 3/14/2012 2:20:26 PM
-Updated 3/14/2012 2:20:10 PM
-Updated 3/14/2012 2:19:59 PM
-Updated 3/14/2012 2:19:49 PM
-Updated 3/14/2012 2:16:40 PM
-Updated 3/13/2012 3:45:32 PM
-Updated 3/13/2012 3:03:00 PM
-Updated 3/13/2012 3:02:31 PM