பார் ஊழியருக்கு சரமாரி அடி : தம்பி கைது; அண்ணனுக்கு வலை
பொன்னேரி : மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரி கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று மாலை, மீஞ்சூரை சேர்ந்த பிரகாஷ் (25), அவரது தம்பி தினேஷ் (24) ஆகியோர் மது குடிக்க சென்றனர். பார் ஊழியர் கோவிந்த ராஜ் சகோதரர்களுக்கு மது பாட்டில் கொண்டு வந்து கொடுத்தார். போதை அதிகமானதும் இருவரும் சைடிஷுக்கு காசு கொடுக்காமல் அங்கிருந்து புறப்பட்டனர். இதை பார்த்ததும் பார் ஊழியர் பிரகாஷ், தினேஷிடம் பணம் கேட்டார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சகோதரர்கள், கோவிந்தராஜை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர். இது குறித்து கோவிந்தராஜ் மீஞ்சூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பார் ஊழியரை தாக்கிய தினேஷை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பிரகாசை போலீசார் தேடி வருகிறார்கள்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/14/2012 4:50:16 PM
-Updated 3/14/2012 4:47:39 PM
-Updated 3/14/2012 3:16:05 PM
-Updated 3/14/2012 2:35:00 PM
-Updated 3/14/2012 2:34:51 PM
-Updated 3/14/2012 2:29:52 PM
-Updated 3/14/2012 2:20:44 PM
-Updated 3/14/2012 2:20:26 PM
-Updated 3/14/2012 2:20:10 PM
-Updated 3/14/2012 2:19:59 PM
-Updated 3/14/2012 2:19:49 PM
-Updated 3/14/2012 2:16:40 PM
-Updated 3/13/2012 3:45:32 PM
-Updated 3/13/2012 3:03:00 PM
-Updated 3/13/2012 3:02:31 PM