2012
26
Feb
இசிஆரில் ரேஸ் செல்வதாக புகார் பைக், கார் ஓட்டிகளுக்கு போலீசார் கடும் எச்சரிக்கை


துரைப்பாக்கம் : கிழக்கு கடற்கரை சாலையில் பைக் ரேஸ் நடப்பதாக போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை சோதனை நடத்திய போலீசார், வேகமாக வண்டி ஒட்டி வந்தவர்களை எச்சரித்து அனுப்பினர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பைக் ரேஸ் நடப்பதாக சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோராவுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி, அடையாறு சரக போக்குவரத்து உதவி கமிஷனர் சுப்பிரமணியன் தலைமையில் போலீசார் இன்று அதிகாலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை சோதனை சாவடி பகுதியில் வாகன சோதனை நடத்தினர். சாலையில் வேகமாக சென்ற கார், பைக்குகளை நிறுத்தி போலீசார் எச்சரித்தனர். வாகனம் வேகமாக  ஒட்டுவதால் ஏற்படும் சிரமம் குறித்து விளக்கினர். அப்போது, அதிகாலை 6 மணி அளவில், 6 இளைஞர்கள் பைக்கில் வந்தனர். பைக் ரேஸ் நடத்துவதுபோல் உடை அணிந்து வந்திருந்தனர். அவர்களை போலீசார் விசாரித்த போது, ‘புதுச்சேரி செல்கிறோம்Õ என்று கூறினர். ‘பைக் ரேஸ் நடத்த வந்துள்ளீர்கள். புதுச்சேரி போக கூடாது. போலீசார் உத்தரவை மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள்Õ என்று போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து, பைக் இளைஞர்கள் அங்கிருந்து சென்றனர். போலீசார் வாகன சோதனையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,