திருத்தணி மாணவன் கடத்தல் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறல்
சென்னை : திருத்தணி மாணவன் கடத்தல் விவகாரத்தில் போலீசாருக்கு எந்த துப்பு கிடைக்கவில்லை. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த விநாயகபுரத்தில் வசிப்பவர் சுப்பிரமணி. விவசாய கூலி தொழிலாளி. இவரது மகன் சந்திரசேகர் (15), திருத்தணியில் உள்ள ராதாகிருஷ்ணன் அரசினர் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த டிசம்பர் 19ம் தேதி டியூஷனுக்கு சென்ற சந்திரசேகர், வீடு திரும்பவில்லை. இது குறித்து திருத்தணி போலீசில் சுப்பிரமணி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப் பதிவு செய்து விசாரித்தார். 2 மாதங்களுக்கு மேலாகியும் சந்திரசேகர் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், சுப்பிரமணியின் செல்போனுக்கு நேற்று முன்தினம் மாலை ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆசாமி, ‘உங்கள் மகன் சந்திரசேகர் எங்களிடம்தான் இருக்கிறான். ரூ.5 லட்சம் கொடுத்தால் அவனை விட்டு விடுகிறோம். இல்லை என்றால் உங்கள் மகன் உயிருக்கு ஆபத்துÕ என மிரட்டிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டான். இதனால் பதற்றமடைந்த சுப்பிரமணி, திருத்தணி போலீசாரிடம் தெரிவித்தார். விசாரணையில், திருப்பதியில் இருந்து மர்மநபர் போன் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், மாணவனை மீட்க போலீசார் நேற்று திருப்பதி சென்றனர். ரூ. 5 லட்சம் கேட்ட நபர் காயின் பாக்ஸை பயன்படுத்தி போன் செய்தது தெரியவந்தது.
மாணவன் மாயமாகி 2 மாதங்கள் ஆகிவிட்டன. உண்மையிலேயே கடத்தப்பட்டிருந்தால், கடத்தல்காரர்கள் உடனே போன் செய்திருப்பார்கள். அத்துடன் சுப்பிரமணி, தன் மகனை காணவில்லை என்று திருப்பதியில் போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார். எனவே, போஸ்டரை பார்த்து யாராவது ஏமாற¢றுவதற்காக போன் செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மாணவன் மாயமான விவகாரத்தில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகிறார்கள். உண்மையில் மாணவன் கடத்தப்பட்டானா அல்லது வேறு எங்கேயாவது சென்றானா என்று தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/28/2012 4:03:42 PM
-Updated 2/28/2012 4:03:18 PM
-Updated 2/28/2012 4:02:35 PM
-Updated 2/28/2012 4:02:14 PM
-Updated 2/28/2012 4:00:37 PM
-Updated 2/28/2012 3:11:28 PM
-Updated 2/28/2012 3:10:53 PM
-Updated 2/28/2012 3:08:55 PM
-Updated 2/28/2012 2:49:13 PM
-Updated 2/28/2012 2:45:14 PM
-Updated 2/28/2012 2:44:08 PM
-Updated 2/28/2012 2:36:17 PM
-Updated 2/28/2012 2:36:07 PM
-Updated 2/28/2012 2:35:57 PM
-Updated 2/28/2012 2:35:47 PM