ஆவடி : காதல் தோல்வியால் விரக்தியடைந்த இன்ஜினியர், தூக்குப்போட்டு இறந்தார். அம்பத்தூர் பாரி நகர் 5வது தெருவில் வசிப்பவர் வெங்கடேஷ் (32). பிஇ பட்டதாரியான இவர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றினார். திருவில்லிபுத்தூர் சொந்த ஊர். வேலையை முடித்துவிட்டு நேற்றிரவு வீட்டுக்கு வந்தார். சாப்பிட்டுவிட்டு படுக்க சென்ற வெங்கடேஷ், நீண்ட நேரமாக செல்போனில் பேசி இருக்கிறார். பின், கதவை பூட்டிவிட்டு படுத்துவிட்டார். காலையில் வெங்கடேஷ் கதவை திறக்கவில்லை. அவரது உறவினர் பட்டாபிராமன் கதவை தட்டினார். திறக்கவில்லை என்றதால் உடைத்து உள்ளே சென்றார். படுக்கை அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் கயிறு கட்டி, தூக்கில் வெங்கடேஷ் பிணமாக கிடந்ததால் அதிர்ச்சியடைந்தார். தகவல் பேரில், அம்பத்தூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார். காதல் தோல்வியால் வெங்கடேஷ் தற்கொலை செய்திருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/28/2012 4:03:42 PM
-Updated 2/28/2012 4:03:18 PM
-Updated 2/28/2012 4:02:35 PM
-Updated 2/28/2012 4:02:14 PM
-Updated 2/28/2012 4:00:37 PM
-Updated 2/28/2012 3:11:28 PM
-Updated 2/28/2012 3:10:53 PM
-Updated 2/28/2012 3:08:55 PM
-Updated 2/28/2012 2:49:13 PM
-Updated 2/28/2012 2:45:14 PM
-Updated 2/28/2012 2:44:08 PM
-Updated 2/28/2012 2:36:17 PM
-Updated 2/28/2012 2:36:07 PM
-Updated 2/28/2012 2:35:57 PM
-Updated 2/28/2012 2:35:47 PM