புதிய தலைமை செயலக முறைகேடு புகார் விசாரணை கமிஷன் தலைவர் தங்கராஜ் திடீர் ராஜினாமா
சென்னை : புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் நீதிபதி தங்கராஜ், தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். கடந்த திமுக ஆட்சியின்போது சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், கோட்டையில் உள்ள கட்டிடத்துக்கே தலைமைச் செயலகம் மாற்றப்பட்டது. புதிய தலைமைச் செயலகம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும், புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தங்கராஜ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து அரசு உத்தரவிட்டது. விசாரணை கமிஷனை எதிர்த்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ‘நீதிபதி தங்கராஜ், டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தவர். அவரது விசாரணையில் நியாயம் கிடைக்காது’ என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை ஐகோர்ட் நீதிபதிகள் முருகேசன், சசிதரன் விசாரித்து தீர்ப்பை தள்ளி வைத்தனர்.
இந்நிலையில், விசாரணை கமிஷன் தலைவர் தங்கராஜ் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை தமிழக அரசுக்கு அவர் அனுப்பியுள்ளார். இன்று காலை ஐகோர்ட் நீதிபதிகள் முருகேசன், சசிதரன் முன்பு அரசு வக்கீல் விஜயகுமார் ஆஜராகி, புதிய தலைமை செயலகம் முறைகேடு தொடர்பான விசாரணை கமிஷன் தலைவர் பதவியில் இருந்து தங்கராஜ் ராஜினாமா செய்துவிட்டதாக தெரிவித்தார். இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு எழுத்துபூர்வமாக மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 12/1/2025 4:11:09 PM
-Updated 12/1/2025 3:40:06 PM
-Updated 12/1/2025 3:10:47 PM
-Updated 12/1/2025 2:44:37 PM
-Updated 12/1/2025 2:44:24 PM
-Updated 12/1/2025 2:44:05 PM
-Updated 12/1/2025 2:43:29 PM
-Updated 12/1/2025 2:43:13 PM
-Updated 12/1/2025 1:59:00 PM
-Updated 11/30/2011 5:34:44 PM
-Updated 11/30/2011 5:34:29 PM
-Updated 11/30/2011 5:34:15 PM
-Updated 11/30/2011 4:23:06 PM
-Updated 11/30/2011 4:22:34 PM
-Updated 11/30/2011 3:35:21 PM