வீட்டு ஜன்னல்களை தட்டிய பீகார் வாலிபர் பிடிபட்டார் : கீழ்பாக்கத்தில் நள்ளிரவில் ரகளை
கீழ்பாக்கம் : கீழ்பாக்கத்தில் உள்ள வீட்டின் ஜன்னல்களை நள்ளிரவில் தட்டி ரகளை செய்த பீகார் வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். சென்னை கீழ்பாக்கம் ஆராவமுதன் தெருவில் உள்ள வீடுகளில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள், ஜன்னல் தட்டும் சத்தம் கேட்டு நேற்று நள்ளிரவு திடுக்கிட்டு எழுந்தனர். வெளியே வந்து பார்த்தபோது ஒரு வாலிபர் தெருவில் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். கை விரல்களை துப்பாக்கி போல் வைத்துக்கொண்டு, ‘அருகில் வந்தால் சுட்டுவிடுவேன்Õ என¢றார். அப்பகுதியை சேர்ந்தவர்கள் கீழ்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், வாலிபரை பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவர் பெயர் நிஷாத் அகமது (22). பீகாரை சேர்ந்தவர் என்று தெரிந்தது. மனநலம் பாதித்தவர் போல் இருக்கும் அவரை போலீசார் கைது செய்தனர். மனநல மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்து, அகமதுவை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். டாக்டர் சான்றிதழை போலீசார் கொடுக்காததால் வாலிபரை மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட முடியாது என்று நீதிபதி கூறினார். இதனால், வாலிபரை போலீசார் அழைத்துச் சென்றனர். பீகாரில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 12/1/2025 4:11:09 PM
-Updated 12/1/2025 3:40:06 PM
-Updated 12/1/2025 3:10:47 PM
-Updated 12/1/2025 2:44:37 PM
-Updated 12/1/2025 2:44:24 PM
-Updated 12/1/2025 2:44:05 PM
-Updated 12/1/2025 2:43:29 PM
-Updated 12/1/2025 2:43:13 PM
-Updated 12/1/2025 1:59:00 PM
-Updated 11/30/2011 5:34:58 PM
-Updated 11/30/2011 5:34:29 PM
-Updated 11/30/2011 5:34:15 PM
-Updated 11/30/2011 4:23:06 PM
-Updated 11/30/2011 4:22:34 PM
-Updated 11/30/2011 3:35:21 PM