இலங்கை படை பிடித்து சென்ற ஐந்து மீனவரை விடுவிக்ககோரி ராமேஸ்வரத்தில் வேலை நிறுத்தம்
ராமேஸ்வரம் : இலங்கை கடற்படை பிடித்து சென்ற 5 மீனவரை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரம், பாம்பனில் புயல் அபாயம் நீங்கியதையடுத்து 712 விசைப்படகுகள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றன. நேற்று முன்தினம் இரவு கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் எமர்சன், பிரசாந்த், வில்சென்ட், அகஸ்டீஸ், போல்டேத் ஆகியோரை பிடித்து சென்றனர்.
இதுதொடர்பாக மீனவர் சங்க அவசர கூட்டம் நேற்று மாலை நடந்தது. இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற மீனவர்கள் 5 பேரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் விடுவிக்கப்படும் வரை கடலுக்கு செல்வதில்லை என தீர்மானித்தனர். இதனடிப்படையில் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 12/1/2025 4:11:09 PM
-Updated 12/1/2025 3:40:06 PM
-Updated 12/1/2025 3:10:47 PM
-Updated 12/1/2025 2:44:37 PM
-Updated 12/1/2025 2:44:24 PM
-Updated 12/1/2025 2:44:05 PM
-Updated 12/1/2025 2:43:29 PM
-Updated 12/1/2025 2:43:13 PM
-Updated 12/1/2025 1:59:00 PM
-Updated 11/30/2011 5:34:58 PM
-Updated 11/30/2011 5:34:44 PM
-Updated 11/30/2011 5:34:29 PM
-Updated 11/30/2011 4:23:06 PM
-Updated 11/30/2011 4:22:34 PM
-Updated 11/30/2011 3:35:21 PM