சென்னை: ஆன்லைனில் வாகன வரி செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கை: வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் பகுதி அலுவலகத்துக்கு வரிகள் மற்றும் கட்டணங்கள் செலுத்த பொதுமக்கள் நாள்தோறும் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். அவர்கள் அதிக நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.
எனவே பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கோ, பகுதி அலுவலகத்துக்கோ செல்லாமல், வீடு அல்லது அலுவலகம் அல்லது கணினி மையம் ஆகியவற்றில் இருந்து கணினி மூலமாகவோ அல்லது வங்கிகள் மூலமாகவோ வாகன கட்டணம், வரிகளை நேரிடையாக (ஆன்லைன் பேமென்ட்) இணையதளம் மூலம் செலுத்தும் திட்டத்தை உடனே துவங்கும்படி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, 1974ம் ஆண்டு மற்றும் 1989ம் ஆண்டு தமிழ்நாடு மோட்டார் வாகன வரி விதிகளில் உரிய திருத்தம் செய்யவும் உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய திட்டம் போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லாமல் கட்டணம் மற்றும் வரிகளை கணினி மூலம் செலுத்த வழிவகை செய்யும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/19/2011 3:04:32 PM
-Updated 11/19/2011 3:03:48 PM
-Updated 11/19/2011 3:03:15 PM
-Updated 11/19/2011 2:44:34 PM
-Updated 11/19/2011 2:44:17 PM
-Updated 11/19/2011 2:31:45 PM
-Updated 11/19/2011 2:24:34 PM
-Updated 11/19/2011 2:06:18 PM
-Updated 11/19/2011 2:05:08 PM
-Updated 11/19/2011 1:27:10 PM
-Updated 11/19/2011 12:33:32 PM
-Updated 11/19/2011 12:32:03 PM
-Updated 11/19/2011 12:31:32 PM
-Updated 11/19/2011 12:31:12 PM
-Updated 11/18/2011 3:46:48 PM