கேரளாவில் திடீர் நிலஅதிர்வு : வீடுகளில் விரிசல் மக்கள் பீதி!
தொடுபுழா: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இன்று அடுத்தடுத்து 2 முறை நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். இடுக்கி மாவட்டத்தின் சில பகுதிகளிலும், கோட்டயம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று காலை அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டது. காலை 5.29 மணிக்கு நிலஅதிர்வு உணரப்பட்டது. இதையடுத்து மக்கள் அலறியடித்து தெருக்களுக்கு ஓடி வந்தனர். 5.48 மணிக்கு மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். வீடுகளுக்குள் செல்ல பயந்து வீதிகளிலேயே இருந்தனர்.
மூலமட்டம், குளக்காவு, வள்ளக்கோடு, செருதோனி, பசுப்பரா, உப்புத்துறை, முல்லை பெரியாறு, வண்டிபெரியார், குமுளி, கட்டப்பனா, இரத்துபேட்டா, பாலா, இரட்டுபேட்டை ஆகிய இடங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வுகள் 2.8 மற்றும் 3.4 ஆகிய ரிக்டர் அளவுகளில் பதிவாகி உள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/21/2011 12:54:56 PM
-Updated 11/20/2011 4:03:35 PM
-Updated 11/20/2011 4:03:26 PM
-Updated 11/20/2011 3:11:44 PM
-Updated 11/20/2011 3:11:34 PM
-Updated 11/20/2011 3:11:25 PM
-Updated 11/20/2011 3:11:16 PM
-Updated 11/19/2011 3:04:32 PM
-Updated 11/19/2011 3:03:48 PM
-Updated 11/19/2011 3:03:15 PM
-Updated 11/19/2011 2:44:34 PM
-Updated 11/19/2011 2:44:17 PM
-Updated 11/19/2011 2:31:45 PM
-Updated 11/19/2011 2:24:34 PM
-Updated 11/19/2011 2:06:18 PM