கேரள சிபிஐக்கு டிமிக்கி கொடுத்தவர் சென்னை ஏர்போர்ட்டில் கைது!
மீனம்பாக்கம்: கடத்தல், மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு கேரள சிபிஐ போலீசாரின் பிடியில் இருந்து தலைமறைவாக வாழ்ந்த வாலிபர், சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார். சென்னை மண்ணடியை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (25). கேரள மாநிலம் கொச்சி சிபிஐ போலீசில் இவர் மீது மோசடி, கடத்தல் மற்றும் பல வழக்குகள் உள்ளன. பல வருடமாக தலைமறைவாக இருந்த அவரை தேடப்படும் நபர் என்று அறிவித்து இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிஐ போலீசார் தகவல் அனுப்பினர்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு கொழும்பு செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்த அன்சாரியின் பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் சோதித்து, தேடப்படும் குற்றவாளி என்பதால் அவரை கைது செய்தனர். பின்னர் கொச்சி சிபிஐ போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/17/2011 10:13:20 AM
-Updated 11/17/2011 10:12:56 AM
-Updated 11/17/2011 10:12:37 AM
-Updated 11/17/2011 10:12:20 AM
-Updated 11/17/2011 10:11:21 AM
-Updated 11/17/2011 10:11:02 AM
-Updated 11/17/2011 10:10:29 AM
-Updated 11/17/2011 10:10:11 AM
-Updated 11/17/2011 10:09:50 AM
-Updated 11/17/2011 10:09:27 AM
-Updated 11/16/2011 4:06:02 PM
-Updated 11/16/2011 4:05:51 PM
-Updated 11/16/2011 4:05:40 PM
-Updated 11/16/2011 4:05:21 PM
-Updated 11/16/2011 4:04:14 PM