2011
12
Jan
வீட்டு கொட்டகையில் தூங்கிய அதிமுக நிர்வாகிக்கு நள்ளிரவில் கத்திகுத்து

ஊத்துக்கோட்டை - பெரியபாளையத்தை அடுத்த கன்னிகைப்பேர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பந்தன் (58). அதிமுக கிளை தலைவர். நேற்று முன்தினம் இரவு கன்னிகைப்பேரில் நடந்த தெருமுனைகூட்டத்தில் பங்கேற்றபின் வீட்டுக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு வெளியே உள்ள கொட்டகையில் படுத்து தூங்கினார். நள்ளிரவில் இரண்டு மர்ம நபர்கள் வந்தனர். தூங்கிக் கொண்டிருந்த சம்பந்தனை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். காயம் அடைந்த சம்பந்தனை சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். புகாரின் பேரில் பெரியபாளையம் சப்இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்கு பதிவு செய்தார். முன்விரோதத்தில் யாராவது கத்தியால் குத்தினார்களா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Follow Me

உணவு உற்பத்தி அதிகரிக்கும்

பாதுகாக்ககடந்த