செங்கிப்பட்டி அருகே அடுத்தடுத்து விபத்து கன்னியாஸ்திரி உள்பட 2 பேர் நசுங்கி சாவு
தஞ்சை : கேரள மாநிலம் எர்ணாகுளம் மேரிமாதா பிரவின்சன் ஹவுஸை சேர்ந்தவர் செருபுஷ்பம் (60), கன்னியாஸ்திரி. இவர் நேற்று சக கன்னியாஸ்திரிகளுடன் வேளாங்கண்ணிக்கு வேனில் சென்று கொண்டிருந்தார். செங்கிப்பட்டி அருகே வேனை நிறுத்திவிட்டு இயற்கை உபாதைக்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது லாரி மோதியதில் பலத்த காயமடைந்தார். தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செருபுஷ்பம் பரிதாபமாக இறந்தார்.
செங்கிப்பட்டி முருகன் காலனியை சேர்ந்தவர் மரியதாஸ் (55), விவசாயி. இவர் நேற்று செங்கிப்பட்டிக்கு டீ குடிக்க சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அந்த இடத்திலேயே இறந்தார். அடுத்தடுத்து நடந்த 2 விபத்துகள் குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/3/2025 10:54:54 AM
-Updated 11/3/2025 10:54:27 AM
-Updated 11/3/2025 10:53:26 AM
-Updated 11/3/2025 10:53:10 AM
-Updated 11/3/2025 10:52:44 AM
-Updated 11/3/2025 10:52:11 AM
-Updated 11/2/2025 3:57:27 PM
-Updated 11/2/2025 3:25:43 PM
-Updated 11/2/2025 3:25:16 PM
-Updated 11/2/2025 3:24:47 PM
-Updated 11/2/2025 3:23:02 PM
-Updated 11/2/2025 10:30:50 AM
-Updated 11/2/2025 10:29:22 AM
-Updated 11/2/2025 10:28:02 AM
-Updated 11/2/2025 10:27:32 AM