கோவை : கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பசூர் ஊராட்சியில் நேற்று துணைத் தலைவர் தேர்தல் நடந்தது. 6வது வார்டு உறுப்பினர் மகேந்திரன், 2வது வார்டு உறுப்பினர் சுகுமார் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 9 வார்டு உறுப்பினர்களில், 4வது வார்டு உறுப்பினர் நாகவேணி அம்மாசெட்டிபாளையம் பகுதியில் பொதுமக்கள் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். துணைத் தலைவர் தேர்தலில் சுகுமாருக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு, நாகவேணியை அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் மகேந்திரனுக்கு ஆதரவாக நாகவேணி செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த அம்மாசெட்டிபாளையம் பகுதியினர் நேற்று காலை வாக்களிக்க ஊராட்சிக்கு வந்த நாகவேணியை வழிமறித்து சரமாரியாக தாக்கினர். ஊராட்சி அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பினர். பின்னர் நாகவேணி, போலீஸ் பாதுகாப்புடன் வாக்களிக்க சென்றார். மொத்தமுள்ள 10 வாக்குகளில் ஒன்று செல்லாததாக அறிவிக்கப்பட்டது. சுகுமார் 5 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/3/2025 10:54:54 AM
-Updated 11/3/2025 10:54:27 AM
-Updated 11/3/2025 10:53:26 AM
-Updated 11/3/2025 10:53:10 AM
-Updated 11/3/2025 10:52:44 AM
-Updated 11/3/2025 10:52:11 AM
-Updated 11/2/2025 3:57:27 PM
-Updated 11/2/2025 3:25:43 PM
-Updated 11/2/2025 3:25:16 PM
-Updated 11/2/2025 3:24:47 PM
-Updated 11/2/2025 3:23:02 PM
-Updated 11/2/2025 10:30:50 AM
-Updated 11/2/2025 10:29:22 AM
-Updated 11/2/2025 10:28:02 AM
-Updated 11/2/2025 10:27:32 AM