சிவகங்கை : சிவகங்கை அருகே உள்ள மதகுபட்டி காவல்நிலைய எஸ்.ஐ. கார்மேகம் (50). சிவகங்கை அண்ணாமலை நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு மதகுபட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அதிகாலை மதகுபட்டி எஸ்.ஐ. பவுல் யேசுதாஸ் தனது பைக்கில் கார்மேகத்தை அழைத்து வந்து அவரது வீட்டருகே விட்டுச் சென்றார். இந்நிலையில் சிறிது நேரத்தில் பயங்கர கத்திக்குத்து காயங்களுடன் கார்மேகம் உயிருக்கு போராடியபடி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவரை கத்தியால் குத்திய நபர் யார்? எதற்காக குத்தினார்? பழைய குற்றவாளிகள் யாரேனும் செய்தனரா? என்று சிவகங்கை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.ஐ.யை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/23/2011 1:57:50 PM
-Updated 10/23/2011 1:57:36 PM
-Updated 10/23/2011 12:59:38 PM
-Updated 10/23/2011 12:56:24 PM
-Updated 10/23/2011 12:49:05 PM
-Updated 10/23/2011 12:48:52 PM
-Updated 10/23/2011 12:48:41 PM
-Updated 10/23/2011 12:37:04 PM
-Updated 10/23/2011 12:36:52 PM
-Updated 10/22/2011 10:16:43 AM
-Updated 10/22/2011 10:16:10 AM
-Updated 10/22/2011 10:15:55 AM
-Updated 10/22/2011 10:15:38 AM
-Updated 10/22/2011 10:15:22 AM
-Updated 10/22/2011 10:15:01 AM