காங்கிரஸ் என்றால் ஊழல் என அர்த்தம் : பாதல் ஆவேசம்!
லூதியானா: காங்கிரசும், ஊழலும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் குற்றம் சாட்டியுள்ளார். லூதியானாவில் பிரகாஷ் சிங் பாதல் நேற்று அளித்த பேட்டி: வெளிநாட்டு வங்கிகளில் கோடிக்கணக்கில் இந்தியர்களின் கறுப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளது. கறுப்பு பணத்தை பதுக்கி இருப்பவர்கள் காங்கிரசுக்கு நெருக்கமானவர்கள்.
எனவேதான், கறுப்பு பணத்தை மீட்க மத்திய அரசு அக்கறை காட்டவில்லை. ஸ்பெக்ட்ரம் முறைகேடு, வீட்டு வசதி ஊழல், காமன்வெல்த் ஊழல் என்று ஊழல் சேற்றில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மூழ்கியுள்ளது. காங்கிரஸ் என்றால் ஊழல் என்று அர்த்தம். காங்கிரசும் ஊழலும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
ஊழல் அமைச்சர்களை காங்கிரஸ் காப்பாற்ற முயற்சிக்கிறது. காங்கிரசின் தவறான அணுகுமுறைகளால் நமது ஜனநாயக அமைப்பே கேலிக்கூத்தாகியுள்ளது. வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பணத்தை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். இவ்வாறு பாதல் கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/20/2011 3:34:15 PM
-Updated 10/20/2011 3:33:42 PM
-Updated 10/20/2011 12:25:57 PM
-Updated 10/20/2011 12:22:32 PM
-Updated 10/20/2011 12:12:20 PM
-Updated 10/20/2011 11:39:36 AM
-Updated 10/20/2011 11:01:11 AM
-Updated 10/20/2011 11:01:02 AM
-Updated 10/20/2011 11:00:49 AM
-Updated 10/20/2011 10:21:03 AM
-Updated 10/20/2011 10:20:50 AM
-Updated 10/20/2011 9:34:54 AM
-Updated 10/20/2011 9:34:36 AM
-Updated 10/20/2011 9:34:13 AM
-Updated 10/20/2011 9:33:48 AM