2011
10
Feb
கேன்டீனில் வடை வாங்குவதில் மோதல்: கைதிகள் அடிதடி வார்டன்கள் காயம்


சேலம்: சேலம் மத்திய சிறையில் 700&க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 6 மணிக்கு கேட் திறக்கப்பட்டது. கேன்டீனில் வடை வாங்கியது தொடர்பாக தண்டனை கைதிகள் ராஜராஜ சோழனுக்கும், சின்னவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜராஜசோழன் தாக்கியதில் சின்னவருக்கு பல் உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த கைதிகளும், காவலர்களும் ஓடி வந்து இருவரையும் சமாதானப்படுத்தினர். சின்னவரை சிறை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

இந்த மோதல் குறித்து ஜெயிலர் பாஸ்கர் ஜெயராஜுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் கைதி ராஜராஜ சோழனை அழைத்து வந்து விசாரித்தார். அப்போது அங்கிருந்த தீ அணைக்கும் வாளியை எடுத்து ராஜராஜசோழன் திடீரென சுழற்றினார். இதில் வார்டர்கள் சின்ராஜ், பாஷா ஆகியோர் காயம் அடைந்தனர். இருவரும் சிறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து சிறை சூப்பிரண்ட் கருப்பண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 




Follow Me


வி ஏ ஒ தேர்வு : ஒரே நபருக்கு 9 பேர் ஹால் டிக்கெட் வந்த விசித்திரம்

தனித்தனியா அனுப்ப நேரம் இல்லாம மொத்தம்