| சென்னை அணியை 170 ரன்னுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். ஹஸி மற்றும் விஜய் இருவரும் அபாரமாக விளையாடி வெற்றியை பறித்து விட்டனர். பெரிய ஸ்கோரை சேஸ் செய்யும் போது தொடக்கம் மிகவும் முக்கியம். தொடக்கத்தில் கிறிஸ் கேல் ஆட்டமிழந்ததால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. தோல்வி வருத்தமளித்தாலும் சிறந்த அணியிடம் தோற்றது சற்று ஆறுதலாக உள்ளது. இந்த தொடரில் சென்னை அணி மிகச் சிறப்பாக விளையாடி வந்தது. சாம்பியன் பட்டத்திற்கு தகுதியான அணி டோனி அன் கோ என்று பெங்களூர் கேப்டன் வெட்டோரி கூறினார்.
|