ஹாங்காங்: சீனாவின் காம இலக்கியத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட Ôசெக்ஸ் அண்ட் ஜென்Õ என்ற படம் கடந்த 1991ம் ஆண்டு ஹாங்காங்கில் வெளியானது. பிரபலமான இந்த படத்தை 3டி தொழில்நுட்பத்தில் ரீமேக் செய்து, Ôசெக்ஸ் அண்ட் ஜென்: எக்ஸ்ட்ரீம் எக்ஸடசிÕ என்ற பெயரில் ஹாங்காங்கில் நேற்று ரீலீஸ் செய்தனர். சுமார் ரூ.15 கோடி செலவில் கேன்டோனீஷ் மொழியில் எடுக்கப்பட்ட இந்த படம் ஷுட்டிங்கின் போதே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இதன் ஷூட்டிங்கை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஜப்பானைச் சேர்ந்த ஆபாச பட நடிகை யுகிகோ சுவோ, நடிகர் சாவோரி ஹரா ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.
ஹாங்காங் தியேட்டர்களில் நேற்று ரிலீசான இந்தப் படத்தை காண கூட்டம் அலை மோதியது. பெண்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது. ஹாங்காங்கின் காஸ்வே பே பகுதியில் உள்ள தியேட்டருக்கு, இந்த படத்தை பார்க்க வந்திருந்த 32 வயது பெண் ஜஸ்டின் லாய் என்பவர் கூறுகையில், ÔÔநான் சினிமாவுக்கு அதிகம் போவதில்லை. ஆனால் இந்த படத்தை மிஸ் பண்ண விரும்பவில்லைÕÕ என்றார். தனது தோழிகளுடன் தியேட்டருக்கு வந்திருந்த கல்லூரி மாணவி யான்ஷேக் என்பவர் கூறுகையில், ÔÔதியேட்டரில் ஆபாச படம் பார்ப்பது இதுதான் முதல் முறை. அதுவும் 3டி படம் என்பதால் ரொம்ப ஜாலியா இருக்கும். இந்தப் படத்தை பார்க்க ரொம்ப ஆர்வமாக இருக்கிறோம்ÕÕ என்றார். ÔÔஇந்தப் படத்தை முதல் ஷோவிலேயே பார்க்க வேண்டும் என்பதால் ஆபீசுக்கு லீவு போட்டு விட்டு பார்க்க வந்தேன்ÕÕ என்கிறார் ஷேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் டேவிட். ÔÔ80 சதவீத டிக்கெட்டுகள் கடந்த வாரமே விற்றுவிட்டன. டிக்கெட் விற்பனை மகிழ்ச்சியளிக்கிறதுÕÕ என்றார் சீன 3டி டிஜிட்டல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தைச் சேர்நத ஷரின் யாவ்.