42 வயதில் காதலில் விழுந்த மல்லிகா
பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத். தமிழில் கமலுடன் ‘தசாவதாரம்’, சிம்புவுடன் ‘ஒஸ்தி’ படங்களில் நடித்துள்ளார். இவருக்கு 42 வயதாகிறது. அவ்வப்போது தனது அரைநிர்வாண படங்களை இணைய தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். பிரான்சில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் பங்கேற்பதை வழக்கமாக கொண்டிருந்தார் மல்லிகா. அப்போது நண்பர் ஒருவர் மூலமாக பிரான்ஸ் நாட்டு தொழில் அதிபர் சிரில்லி அக்ஸன்பேன்ஸ் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக உருவெடுத்தது. கடந்த மாதம் காதலர் தினத்தன்று மல்லிகாவுக்கு சிரில்லி, விலை உயர்ந்த கார் பரிசளித்ததாக கூறப்படுகிறது. தற்போது சிரில்லிவுடனான காதலை பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார் மல்லிகா. காதல் மலர்ந்தது பற்றி விரைவில் அவர் விளக்கமாக தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.