அமெரிக்காவின் உதாக் பகுதியில் பறந்து சென்ற கழுகு ஒன்று வாகனத்தில் அடிபட்டு படுகாயம் அடைந்தது. கழுகை பார்த்தவர்கள் அதை மீட்டு உடனடியாக அங்குள்ள வன உயிரியல் பூங்கா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சுமார் 2 மாத காலமாக கழுகுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டது. வன உயிரியல் புத்துணர்வு மையம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. தற்போது முழுமையாக குணமடைந்ததை அடுத்து கூண்டிலிருந்து கழுகு திறந்து விடப்பட்டது. கழுகு சுதந்திரமாக பறப்பதை கண்டு பூங்கா ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.