திருவொற்றியூர்,: திருவொற்றியூர் மண்டல 7-வது வார்டு திமுக சார்பில்திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் இளைஞர் எழுச்சி நாள் விழா ராமசாமி நகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வட்ட செயலாளர் ஆதிகுருசாமி தலைமை தாங்கினார். நகர செயலாளர் தனியரசு வரவேற்றார். வட்ட செயலாளர்கள் எம்எல்.சரவணன், இளவரசன், ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் கலந்து கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் 10 பெண்களுக்கு தையல் இயந்திரம், 640 பெண்களுக்கு புடவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாதவரம் சுதர்சனம் வழங்கினார். இதில் தலைமைக் கழக பேச்சாளர் சேலம் சுஜாதா, கவுன்சிலர் எம்.டி.துரை, நிர்வாகிகள் மனோகரன், கண்ணதாசன், தியாகராஜன், எஸ்கே.மணி, நாராயணன், தனசேகர், சியாமளா, விக்டோரியா, ராஜ், கார்த்திக், சலீம் பாஷா, சுரேஷ், முருகன், யுவராஜ், பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். வட்ட செயலாளர் சந்தானம் நன்றி கூறினார்.