தமிழகத்தில் 9 கட்டமாக நடந்த 1952ம் ஆண்டு சட்டசபை தேர்தல்
திருச்சி,: தமிழகத்தில் இப்போது சாலை வசதி, போக்குவரத்து, பாதுகாப்பு, தொலை தொடர்பு மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் என அனைத்து துறைகளிலும் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளதால் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தலை நடத்த முடிகிறது. ஆனால் முதல் சட்டமன்ற தேர்தல் 1952ல் நடந்தபோது 9 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தல் நடந்த தேதி விவரங்கள் வருமாறு:
1952- ஜனவரி 2, 5, 8, 9, 11, 12, 16, 21, 25.
1957- மார்ச் 1, 4, 6, 8,11.
1962- பிப்ரவரி 17, 19, 21, 24.
1967- பிப்ரவரி 15, 18, 21.
1971- மார்ச் 1, 4, 7.
1977- ஜூன் 12, 14
1980- மே 28, 31
1984- டிசம்பர் 24(இப்போது தான் தமிழகத்தில் முதன் முதலாக ஒரே கட்ட தேர்தல் அறிமுகமானது)
1989- ஜனவரி 21
1991- ஜூன் 15.
1996- ஏப்ரல் 27, மே 2.
2001- மே 10.
2006- மே 8
2011- ஏப்ரல் 13.
2016- மே 16.