வினோத வாட்ச் தேடி அலையும் சூர்யா
சூர்யா நடித்துள்ள ‘24’ படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. இளவயது, வயதான தோற்றம், வில்லன் ஆத்ரேயா கதாபாத்திரம் என 3 வித தோற்றத்தில் மாறி மாறி மிரட்டுகிறாராம் சூர்யா. ஒரு வினோத வாட்சை தேடி வில்லன் சூர்யா வருவதுபோல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ‘ஒரே கருவறையில் உதித்தோம் ஓரிரு நொடிகளில் ஜனித்தோம் ஒரே உருக்கொண்டோம்’ என வித்தியாசமான டயலாக்கில் ஆத்ரேயா கதாபாத்திரத்தில் சூர்யா கவர்கிறார். கோடை விடுமுறைக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் சிங்கம் 3 (எஸ் 3) படத்தில் பிஸியாகிவிட்டார் சூர்யா. விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, மதுரை, காரைக்குடியில் நடந்துள்ளது. அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்காக ருமேனியா நாட்டுக்கும் பின்னர் மலேசியாவிற்கும் படக் குழு செல்ல தயாராகி வருகிறது. இறுதிகட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் சென்னை, விசாகப்பட்டினம், கோவா செல்லவுள்ளனர். ஆயுதபூஜையையொட்டி படத்தை ரிலீஸ் செய்ய எண்ணி உள்ளனர்.