வண்ணாரப்பேட்டையில் 3 வயது சிறுமிக்கு டெங்கு பொதுமக்கள் அச்சம்
தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையில் 3 வயது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்..சென்னை புதுவண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (30). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மல்லிகா (27). இவர்களது மகள் சாய் அக்ஷயாஸ்ரீ (3). இவள், கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.காய்ச்சல் குணமாகாததால், தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்த்தனர். ரத்தம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது, டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.